இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்ட மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்வது அவ்வபோது நிகழ்கிறது. அதாவது, குழந்தைகளும் பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து அவர்களுக்கே தெரியாமல் பணம் செலுத்தி கேம் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 30க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளும் பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து அவர்களுக்கே தெரியாமல் பணம் செலுத்தி கேம் விளையாடுகிறார்கள்.

இந்தநிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்துவது, சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கும் வகையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. இதுதொடர்பான பரிந்துரைகளை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. அதாவது, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது. ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கே.ஒய்.சி. வாங்க வேண்டும்.

பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம். ஆன்லைன் விளையாட்டில் தினம், வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் தர வேண்டும். ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்கலாம். ஏற்கனவே சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இது போன்ற நடைமுறைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு விபூதி அடித்த வெப்சைட்..!! இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே..!! கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்..!!