வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கோகுலம் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல மல்லிகரை, கணக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது பள்ளி வாகனம், கரளம்பட்டி கிராமம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், ஒரு வீட்டின் சுவரின் மீது பேருந்து மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, அக்கிருந்தவர்கள் உடனே ஓடி வந்து பள்ளி வேனில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் மரணம்..!!