சேலம் டவுன் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு, போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சேலத்தில் கடந்த சில நாட்களாக போதை பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. அதாவது, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஆன்லைனில் போதை மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவற்றை கும்பல் ஒன்று விற்பனை செய்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த கும்பல் பெரிய நெட்வொர்க்கை வைத்து இந்த செயலில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கடந்த சில நாடகளுக்கு முன்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், சேலம் டவுன், ஆற்றோர காய்கறி மார்க்கெட் பகுதியில் கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், சேலம், திருவாக்கவுண்டனுாரைச் சேர்ந்த வெங்கடேசன், ராம்குமார், உட்பட ஒன்பது பேர் என்பது தெரிந்தது. இவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுதவிர, ஆன்லைனில் போலியான மருந்து கடை பெயரை பதிவிட்டு, வலி நிவாரண மாத்திரைகள் என்ற பெயரிலும் போதை மாத்திரையை விற்பனை செய்துவந்துள்ளனர். அதாவது, அந்த மாத்திரைகளை, 3,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததும், சேலத்தில் கல்லுாரி மாணவர்கள் பலருக்கு அதிகளவில் விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, கும்பலிடம் இருந்து, 7,900 போதை மாத்திரைகள், 40 கிலோ புகையிலை பொருட்கள், இரண்டு கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: ”எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா”..? அரசிராமணி பகுதியில் குப்பை கொட்ட வந்த டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதம்..!!