மேதகு வே. பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் குருதிக் கொடையை தானமாக வழங்கினர்.
1954 நவம்பர் 26ஆம் தேதி தனது பெற்றோருக்கு நான்காவது மகனாக பிறந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். ஜாஃப்னா தீபகற்பத்தில் அதாவது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் இவர் பிறந்தார். இந்நிலையில், வே.பிரபாகரனின் 70-வது பிறந்தநாள் விழா நாளை (நவம்பர் 26) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று (நவ.24) குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற இந்த குருதிக்கொடை முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர். இதில், சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து தற்போது அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், அக்கட்சியினர் குருதிக்கொடை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Read More : வலுப்பெறுகிறது புயல் சின்னம்!. இன்றுமுதல் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!