பூமணியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே பூமணியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, கடந்த மாதம் 28ஆம் தேதி கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.பக்தர்கள் விரதம் இருந்து தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக பூஜை தீபராதனை செய்து வழிபாடு செய்தனர்.
இந்த பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் காவிரி ஆற்றாங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மனை அலங்காரம் செய்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இதனையடுத்து, சன்னதி முன்பு அக்னி சட்டியில் பெண்கள் எண்ணெய் ஊற்றி பூவோடு எடுத்தல், கோவில் சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு தட்டம் எடுத்தல், முடி காணிக்கை செய்தல், கெடா வெட்டுதல், அக்னி கரகம் எடுத்தல், பெண்கள் அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இதில் பூமணியூர், கோனேரிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வெள்ளிக்கிழமையான இன்று மாரியம்மன் உலா மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
Read More : நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக சின்னுசாமி நியமனம்..!! சீமான் அறிவிப்பு..!!