எடப்பாடி அருகே பூலாம்பட்டி சக்திகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூமித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூலாம்பட்டி அருகே குப்பனுார் மாரியம்மன், சக்தி காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு தினமும் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதுமட்டுமல்லாமல், அம்மன் திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம், யாக பூஜைகளும் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் புலிவேடம் அணிந்தபடி, ஊர்வலமாக சென்று கோவில் முன்பு ஆட்டின் கழுத்தை கடித்து ரத்த அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். இதை ஒட்டி குறவன் குறத்தி ஆட்டம், சுவாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Readmore: கள்ள ஓட்டுகள் மூலம் வெற்றி பெற்ற திமுக..!! 2026இல் விஜய் கட்சியுடன் கூட்டணியா..? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி..!!