நிருபரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், எஸ்.எஸ்.ஐ. உள்பட இரண்டு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவர், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் டிவியில் நிருபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், நேற்றைய தினம் ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்களை மடக்கி, லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதை யுவராஜ், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் கேட்டபோது, தான் ஒரு நிருபர் என கூறியிருக்கிறார். ஆனாலும், அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தகவல் சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவின் கவனத்திற்கு செல்லவே, இச்சம்பவம் குறித்து விசாரித்த அவர், அந்த இரண்டு போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Read More : எடப்பாடி அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வடமாநில வாலிபர்..!! கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி..!!