குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன் பிரைடு ரைஸ். அதுவும் இந்த உணவை ரோட்டு கடை முதல் பெரிய ஹோட்டல்கள் என அடிக்கடி வாங்கி சாப்பிடும் நபர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். இருப்பினும், ஆங்காங்கே சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில், நேற்று, சென்னையில் ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 15 வயது கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் (Gwalior) கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார்.

பின்னர், போட்டியை முடித்துவிட்டு கடந்த நவம்பர் 16-ஆம் தேதி அன்று, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ் (Chicken Rice), பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார்.

ரயில் சென்னை வந்ததும், அவர் எலினாவை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். சிகிச்சை முடிந்த பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவர், அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனே மீட்டு எலினாவை பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில், சிக்கன் ரைஸ் தொடர்பான எச்சரிக்கை குறிப்புகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரியாணி, பிரைடு ரைஸ், போன்றவற்றை சமைத்த 3 மணிநேரத்திற்குள் சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அப்படியில்லாமல், நீண்ட நேரம் அவற்றை வைத்திருந்தால், காற்றில் உள்ள வைரஸ் பாக்டீரியாக்கள், அதில் கலந்து விஷமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Readmore: சேலத்தில் அதிர்ச்சி!. அதிக நேரம் வொர்க்அவுட்!. ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!