விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) பயனாளிகள் தற்போது 18வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதி முதலீட்டின் மூலம் விவசாயிகள் தங்களின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.தற்போதுவரை விவசாயிகளின் கணக்கில் 17 தவணைகளை மத்திய அரசு நிதியை செலுத்தியுள்ளது. அடுத்த மாதம் 18வது தவணை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமரின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் (பி.எம். கிஸான் சம்மான் நிதி) கூடுதலாக 25 லட்சம் விவசாயிகள் கடந்த 100 நாள்களில் சோ்க்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்தநிலையில், இந்த திட்டத்தின் கீழ் கணவன் – மனைவி இருவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்ற கேள்வி பலதரப்பில் எழுந்துள்ளது. இதில் ஒன்று, மத்திய அரசின் இந்த திட்டத்தை கணவன்-மனைவி இருவரும் இணைந்து பயன்படுத்திக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பலன் நிலம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவருக்கு மட்டுமே கிடைக்கும். பெண்ணின் பெயரில் நிலம் இருந்தால் மட்டுமே, இத்திட்டத்தின் பலன் பெண்களுக்கு கிடைக்கும்.

Readmore: சேலம் பெரியார் பல்கலை.யில் புதிய சர்ச்சை!. ஒற்றை இலக்கத்திற்கு சரிந்த மாணவர் சேர்க்கை!. ஆசிரியர் சங்கத்தினர் கவலை!