பற்சிதைவு, சொத்தைப்பல் எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒன்றாகும். பற்களில் ஏற்படும் சிறு சிறு குழிகளே பற்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. பற்சிதைவு ஏற்பட்டால் அசௌகாியமாக இருக்கும். எாிச்சல் ஏற்படும். பற்சிதைவுக்கு சாியான சிகிச்சை செய்யவில்லை என்றால், பல்வலி, பல் நோய்த்தொற்று மற்றும் பல் உதிா்தல் போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும். துரித உணவுகளை உட்கொள்வதாலும், தொடர்ந்து பற்களை பராமரிக்காததாலும், அவை சிதைந்து, புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வலி, வாய் துர்நாற்றம், பல் உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான பற்சிதைவு பிரச்சினைகளுக்கு வீட்டில் இருந்தே மிக எளிதாக சிகிச்சை செய்யலாம்.
உங்கள் பற்களில் கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளைக் கண்டாலோ அல்லது ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு அல்லது சீழ் வெளியேறினாலோ, உங்களுக்கு பல் சிதைவு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இது தவிர, தொடர்ந்து வாய் துர்நாற்றம் ஏற்பட்டு, பற்கள் வலுவிழந்து, உடைய ஆரம்பித்தால், பல் சொத்தை மற்றும் தொற்று பிரச்னை உள்ளது என அர்த்தம். பல் சொத்தைக்கு மிகப்பெரிய காரணம் இனிப்புகள் மற்றும் நாம் சாப்பிடும் ஜங்க் உணவுகள் பற்களில் ஒட்டிக்கொள்வதாகும். பற்களில் சிக்கிய உணவு பின்னர் பற் சிதைவு மற்றும் ஈறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
உணவு உண்ட பிறகு, ஆண்டிசெப்டிக் மவுத்வாஷையும் பயன்படுத்தலாம். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கலாம். பொதுவாக, பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவார்கள் ஆனால் பகலில் பலவிதமான உணவுகளை சாப்பிட்ட பிறகு, வாயில் பாக்டீரியாக்கள் வளருவதும், நாம் சாப்பிடும் உணவுகள், ஸ்னாக்ஸ், இனிப்புகள் பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்வதும் சகஜம். இத்தகைய சூழ்நிலையில், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், பல் துலக்குதல் அல்லது வாய் கொப்பளிப்பதன் மூலம் உங்கள் பற்களை நன்றாக சுத்தம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இதனை Idp7News உறுதி செய்யவில்லை.
Readmore: மைனர் மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய பெற்றோர்!. வீடியோ எடுத்து சம்பாதித்த அவலம்!. தலைநகரில் பகீர்!