சென்னையில் கொட்டுப்போன ஆட்டு இறைச்சிகள் விநியோகிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் ஆங்காங்கே அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

“கெட்டுப்போன ஆட்டுக்கால் விவகாரம் எங்களுக்கு புதுசாக இருக்கிறது.. 10 நாட்களுக்கு முன்பு பார்த்தோம் என்றால், சென்னை எழும்பூரில் 1700 கிலோ ஆட்டுக்கறிகளை நாஙகள் பிடித்தோம். அப்படி பிடித்த போது, நாங்கள் அவர்களிடம் எங்கேயே எல்லாம் சப்ளை செய்தீர்கள் என்று விசாரித்து சேகரித்தோம். அப்படி நாங்கள் கண்டுபிடித்த இடங்களை தினமும் தேடி சென்ற போது தான், இந்த கெட்டுப்போன ஆட்டுக்கால் இருந்த இடம் பற்றி தெரிய வந்தது. குறிப்பிட்ட நிறுவனம் சென்னை முழுக்க ஆட்டுக்கால்களை மட்டுமே சப்ளை செய்து வந்திருக்கிறார்கள்.

உடனே எங்களுக்கு சந்தேகம் வந்ததால், அந்த இடத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து சென்றோம். அங்கு சென்று பார்த்த போது தான், அது மிகவும் தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது, மாதக்கணக்கில் சேமிப்பதாக கூறினார்கள். நீங்கள் எங்களை ரெய்டு நடத்திய பிறகு, ஓட்டல்கள் எங்களிடம் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள் என்று கூறினார்கள். நான் அந்த இடத்தை நான்கு நாட்களுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன்.

பொதுவாக ஆட்டுக்கால்களை பொறுத்தவரை நமது வீடுகளிலும் இருக்கும். உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு சூப் வைத்து கொடுப்பார்கள். அதை உப்புக்கண்டம் என்று சொல்வோம்.. அதை உப்பு போட்டு, மஞ்சள் போட்டு, டிரையாக வெயிலில் காய வைத்திருப்போம்.. அப்படி செய்யும் போது, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் இருக்காது.. இல்லை, உப்புக்கண்டம் செய்யப்படாத ஆட்டுக்கால் என்றால் மைனஸ் 18 டிகிரிக்கு கீழ் இருக்கக்கூடிய டிரை பீரிசல் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், கண்டிப்பாக குடலுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே அப்படி பாதி சமைத்த ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட்டால் தான் பிரச்சனை வரும். அதேநேரம் முழுமையாக சமைத்த ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் வராது. எனினும் இந்த சிக்கல் வராமல் இருக்க, கெட்டுப்போன ஆட்டுக்கால்களை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Readmore: காமராஜர், எம்.ஜி.ஆரின் கனவு திட்டம் நிறைவேறுமா?. காவிரி நடுவே புதிய அணை!. தமிழகத்தில் எந்த இடத்தில் தெரியுமா?