நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நியாய விலைக்கடைகள் இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர். மேலும் அரசின் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு, தீபாவளி பரிசு தொகுப்பு, வெள்ள நிவராணம் பெறுவதற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

அந்த வகையில் அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், உதவிகள் மக்களிடம் செல்ல வேண்டும் என நோக்கமாக உள்ளது. ஆனால் இதிலும் பெரிய அளவில் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. போலி ரேஷன் அடைகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஒருவருக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வேறு, வேறு பெயரில் இருப்பது தெரியவந்தது. மேலும் உணவு பொருட்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகாரும் எழுந்தது. இதனால் உண்மையாக பாதிக்கப்படக்கூடிய ஏளை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சரவர கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டது.

கேஒய்சி என்பது Know Your Customer என்பதுதான் Kyc-யின் விரிவாக்கமாகும் கேஒய்சி என்பது தங்களது அடையாளங்களை சமர்பிப்பதாகும். அந்த வகையில் ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது ரேஷன்கடைகளில் நேரடியாக சமர்பிக்கலாம். இந்த அப்டேட்டை முடிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரேஷன் கடைகளில் ஏராளமான மக்கள் தங்களது தகவல்களை உறுதி செய்து கொண்டனர். மேலும் ஆன்லைனிலும் கேஒய்சி தொடர்பாக தகவல்களையும் தேடினார். இந்தநிலையில் ரேஷன் கார்டு கேஒய்சிக்கான பதிவு செய்வதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 31 ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டது. எனவே இந்த மாதம் இறுதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது இன்னும் 10 நாட்கள் கூட இகேஒய்சி ‌ சரிபார்ப்பை முடிக்க கால அவகாசம் இல்லை. எனவே, இதனை ஆன்லைன் சென்டரில் சென்று எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இல்லையென ‌https://tnpds.gov.in/என்ற இணையதள முகவரிக்குள் சென்றும் ஆட்சிக் கொள்ளலாம். மேலும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்காவிடில் அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்பதால் உடனடியாக பொதுமக்கள் இந்த செயல்பாட்டினை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: அலெர்ட்!. உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!