சேலத்தில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் சுற்றித் திரிந்தனர். மங்கி குல்லா மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தனர். இதேபோல் மற்றொரு பகுதியிலும் 2 பேர் முகக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரியும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரவு நேரங்கள் வெளியே செல்ல அச்சமாக இருப்பதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.