அனைவருக்கும் பென்சன் வழங்கும் திட்டமாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் (IRDAI) ‘சரல் பென்ஷன் யோஜனா’ திட்டம் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
சரல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? தனியார் வேலையில் இருப்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட பிரீமியம் தொகையை ஒரு முறை முதலீடு செய்து, ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவது தான் சரல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் 40 – 80 வயதிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம். இந்தத் திட்டம் எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளில் இருக்கின்றது.
சரல் பென்ஷன் யோஜனா இரு வகைப்படுகிறது. ஒன்று, ‘Single life Annuity’. இன்னொன்று, ‘joint life Annuity’. Single life Annuity-ன் படி, இந்தத் திட்டத்தில் இணைந்தவரின் ஓய்வுக்காலத்திற்கு பிறகு பென்ஷன் தொகை வழங்கப்படும். அவர் இறப்பிற்கு பிறகு, மீதி இருக்கும் மொத்தத் தொகையும் நாமினிக்கு வழங்கப்பட்டு விடும். Joint life Annuity-ன் படி, ஓய்வுக்காலத்திற்கு பிறகு அவருக்கும், அவருக்கு பிறகு நாமினிக்கு பென்ஷன் வழங்கப்படும். நாமினி இறந்தப்பின்னர், அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு மீதி தொகை வழங்கப்பட்டுவிடும்.
இந்தத் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு ஒருமுறை, மூன்று மாதம், ஆறு மாதம், ஒன்பது மாதம், ஓராண்டு என நம் தேவைக்கேற்ப கால அளவில் பென்ஷன் பெற முடியும். அதில் ஆண்டுக்கு ரூ.12,000 முதல் பென்ஷன் பெற்றுகொள்ள முடியும். நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கேற்ப பிரீமியம் கட்டிக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு பென்ஷன் பெறும் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். அதன் பிறகு, வருமான வரி படிநிலைகளை பொறுத்து வருமான வரி கணக்கீடு செய்யப்படும்.
Readmore: சீமான் கட்சியில் என்னதான் நடக்குது?. அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!. இன்று எத்தனை பேர் தெரியுமா?