பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி, அதனை வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி அதில் பணம் சம்பாதித்து வந்த தாய், தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்து வருகின்றன. இதையடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. பெண்களை பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும், சென்னை ஐஐடி கேண்டீனில் தேநீர் குடிக்க சென்ற முதுகலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் இன்னும் மறையாத நிலையில், தலைநகர் சென்னையில் மீண்டும் ஓரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி, அதனை வீடியோ எடுத்து பெற்றோர்கள் விற்பனை செய்து வந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமி 10ம் வகுப்பு பயின்று வருகிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு அவரது பெற்றோர் மைனர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுமட்டுமல்லாமல், பாலியல் தொழிலில் உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்தும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளியே தெரிந்த நிலையில் தாய் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: உஷார்!. சுடுதண்ணீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை!. 9 நாட்களுக்குப்பின் நிகழ்ந்த சோகம்!.