காஞ்சிபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தையின் உயிரை அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்த அஜித் டயானா தம்பதிகளுக்கு குகனேஷ் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. வீட்டில் தழுந்து விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த குழந்தை கீழே கிடந்த தைல டப்பாவை எடுத்து வாயில் போட்டு உள்ளது. அந்த டப்பாவை வெளியே துப்ப தெரியாமல் குழந்தை சிரமப்பட்டு முழுங்க முயன்று உள்ளது. பெரிய சுற்றளவு உள்ள இந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சென்று பலமாக சிக்கிக் கொண்டது.

இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை, மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பாலாஜி மற்றும் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் மணிமாலா ஆகியோர் முடிவு எடுத்து சில வினாடிகள் ஆலோசனை செய்தனர்.

பின்னர் குழந்தையை மென்மையாக தூக்கி பிடித்து “நுணுக்கமாக செயல்பட்டு தொண்டைக்கும் மூச்சு குழலுக்கும் இடையில் பலமாக சிக்கி இருந்த தைல டப்பாவை குரல்வளை காட்டி என்ற முறையில் போராடி தைல டப்பாவை மிக லாவகமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார். தைல டப்பாவை தொண்டையில் இருந்து எடுத்த பின்னர் குரல் வளைக்கும் தொண்டைக்கும் எந்தவிதமான சேதமம் இல்லை, குழந்தையின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதியளித்தனர்.

Readmore: வீடு, மனை விற்கப்போறீங்களா?. இதை செய்யவில்லையென்றால் ரூ.15,000 வரை அபராதம் !. அதிரடி உத்தரவு!