செங்கரடு பஞ்சாயத்து செயலாளர் நீக்க விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்பதால் சேலம் மாவட்ட ஆசியர் பிருந்தா தேவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா செங்கரடு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி; சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராம பஞ்சாயத்தில் செயலராக பணியாற்றினார். பஞ்சாயத்து நிதியை தவறாக பயன்படுத்தியதாக, இவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, 2017 ஆகஸ்டில் சேலம் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மூர்த்தி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 16 வாரங்களுக்குள் மீண்டும் பணியில் அமர்த்தும்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, மூர்த்தி தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதி பட்டு தேவானந்த் முன், விசாரணைக்கு வந்தது. மூர்த்தி சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜரானார். சேலம் கலெக்டர் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கலெக்டர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு வாரன்ட் பிறப்பித்து, விசாரணையை வரும் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Readmore: பிஎம் கிசான்!. கணவன்-மனைவி இருவருக்கும் நிதியுதவியா?. 18வது தவணையில் முக்கிய முடிவா?. விதிகள் இதோ!