Permanent Account Number (PAN) மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் ஏனெனில், முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பான் என்பது நிதி பரிவர்த்தனையிலும் பயன்படுத்தப்படும் ஆவணம். ஆனால், பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது. கவலைப்பட வேண்டாம், ஒரு சுலபமான வழி இருக்கிறது. வருமான வரித் துறையிலிருந்து டூப்ளிகேட் பான் அட்டையை எளிதில் பெறலாம்.

வருமான வரி பான் சேவைகள் பிரிவின் வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள பல ஆப்ஷன்களில் இருந்து, பான் அட்டையை மீண்டும் ப்ரிண்ட் செய்வதற்கான, ‘ரீபிரிண்ட் பான் கார்டு’ என்ற ஆப்ஷனை தேர்தெடுக்க வேண்டும்.

uplicate PAN card-ஐ ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? TIN-NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று services என்ற பிரிவில் PAN என்பதை தேர்ந்தெடுக்கவும். இதில் apply என்ற பிரிவை தேர்ந்தெடுத்த பிறகு, online application form தோன்றும். அதில் கேட்கப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து submit செய்யவும். தொடர்ந்து உங்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட இ மெயிலுக்கு விவரம் வந்துவிடும்.

அதனை பூர்த்தி செய்து, உங்களுக்கு e-PAN card அல்லது physical PAN card இரண்டில் எது தேவை என்பதை தேர்ந்துடுக்கவும். e-PAN card தேவை என்றால் அது உங்களின் இ மெயிலுக்கு அது வந்துவிடும். physical PAN card தேவை என்றால் உங்களது முகவரிக்கு duplicate PAN card அனுப்பிவைக்கப்படும்.

duplicate PAN card-ஐ offline-ல் விண்ணப்பிப்பது எப்படி?அதிகாரபூர்வ NSDL பக்கத்தில் இருந்து “Request for new PAN card or/and changes or Correction in PAN Data” என்ற படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும். படிவத்தை கருப்பு மை பேனாவால் , பெரிய எழுத்துக்களில் நிரப்பவும். 10 இலக்க பான் எண்ணை சரியாக நிரப்பி , உங்கள் கையெழுத்தை சரியாக இடுவதை உறுதி செய்ய வேண்டும்.

தனிப்பட்ட நபராக இருந்தால், உங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை இணைக்கவும். தேவையான ஆவணங்களை கட்டணத்துடன் சேர்த்து NSDL மையத்திற்கு அனுப்பவும். பிறகு 15 இலக்க எண் கொண்ட acknowledgement form உங்களுக்கு கிடைக்கும் . தொடர்ந்து NSDL உங்களது விண்ணப்பத்தை வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்புவார்கள். தொடர்ந்து இரண்டு வாரங்களில் உங்களது duplicate PAN card உங்களுக்கு கிடைக்கும்.

Readmore: எடப்பாடியில் அதிர்ச்சி!. பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!! தட்டித்தூக்கிய போலீஸ்..!!