பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்று. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. பெரிய தொகைகளை ஆன்லைனில் அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம். அதே சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
அதிக வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். அதாவது, இந்தாண்டின் நிதி நிலை அறிக்கையின்படி, ரூ. 7 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் வரிமான வரி செலுத்த வேண்டும். இந்த வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. நாம் செய்யும் பல முக்கியமான விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம்.
ஒருவர் வங்கிக் கணக்கை தொடங்கவும், பங்கு சந்தையில் முதலீடு செய்யவும், 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணத்தை அனுப்புவதற்கு பான் கார்டு தேவை. இது தவிர, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்ட் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த ஒரு பான் கார்டைத்தான் பண பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்த முடியும்.
Read More : ”இப்பவும் ஒன்னும் கெட்டு போகல”..!! தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரித்தால் ரூ.45,000 கோடி பெற்றுத் தருவோம்..!!