காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணமான 2 நாட்களில் வாடகை வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள வாடைகை வீட்டில் புதுமண தம்பதி புதியதாக குடிபுகுந்தனர். இந்நிலையில், திருமணம் ஆகி 2 நாட்களே ஆன நிலையில் குடிபுகுந்த புதுமண தம்பதி இருவரும் நேற்று முன் தினம் முதல் நேற்று மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இருப்பினும், வீட்டின் வெளிப்புறம் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கை அறையில் 2 பேரும் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட புதுமண தம்பதியில், சென்னை ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்த விஜயன் (வயது 26), சென்னை திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தைச் சேர்ந்த பவித்ரா (24) என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறி 2 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: பற்றி எரிந்த சிறை..!! 160 பெண் கைதிகளை பலாத்காரம் செய்து தீவைத்து கொளுத்திய ஆண் கைதிகள்..!!