குமாரபாளையம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில். ஓட்டுநர் பலியான நிலையில், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி நேற்று ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை பிரிவு அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பழனியை சேர்ந்த ஓட்டுநர் வீரபிரதீப் (27) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் லேசான காயங்களுடன் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குமாரபாளையம் தீயணைப்புப் படையினா், மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.