ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி ஏரிக் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையின் ஒரு பாதை மூடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்ததால், கரை உடையும் அபாயத்தில் உள்ளது.
இந்தநிலையில், வரும் 15, 16 ,17 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையின் ஒரு பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணமாவே இந்த பாதை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.