தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஆட்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு நிலையங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales Man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்று (அக்டோபர் 9) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.drbchn.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பு : மதிப்பிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. விண்ணப்பதாரர்கள் https://www.drbchn.in/application_reg_1.php?appId=1 என்ற இணைப்பை க்ளிக் செய்து போதிய விவரங்களைப் பூர்த்தி செய்து, சேல்ஸ் மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல https://www.drbchn.in/application_reg_1.php?appId=2 என்ற இணைப்பைத் தேர்வு செய்து, பேக்கர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் இவை சென்னை மாவட்டத்துக்கு மட்டுமே. சென்னை மாவட்டத்தில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு: https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf. தொலைபேசி எண்கள்: 044-2461 6503, 2461 4289. இ மெயில் முகவரி: chennaidrb@gmail.com -ல் தெரிந்து கொள்ளலாம்.