தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி அக்.29 முதல் நவ.28 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம். மேலும், போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்திடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Readmore: ஐயப்ப பக்தர்களே..!! சபரிமலைக்கு இந்த வழியாகவும் செல்லலாம்..!! முழு விவரம் இதோ..!!