தமிழக அரசைப் பொறுத்தவரை 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் உண்மையில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்த 15 நாட்களில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்று விசாரிக்கும்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உடனடியாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது அரசுக்கு நிதி செலவில் நெருக்கடியை ஏற்படுத்துவதால் புதிய ரேஷன் கார்டு விநியோகம் மெதுவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் இப்போதைய நிலை என்னவென்றால் ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பு வரை விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் விண்ணப்பங்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து ஏற்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. அதனால், ஜூன் 15 ஆம் தேதிக்குப் முன் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும். அந்த தேதிக்குப் பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும்.

Readmore: ஓமலூர் பண்ணப்பட்டி ஏரி உடையும் அபாயம்!. பாதுகாப்பு கருதி சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலை மூடல்!.