தற்போது செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது. பல்வேறு முன்னி நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இதனால் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பும் நடத்தப்பட்டது. 10 ஆள் செய்யும் வேலைகளை கூட ஏஐ செய்வதால் ஆட் குறைப்பு செய்யப்பட்டது. சினிமா துறை, மீடியா துறை, ஐடி துறை என பல்வேறு துறைகளில் பட்டையை கிளப்பி வருகிறது.

ஏஐ மூலம் செயல்படும் செய்தி வாசிப்பாளர்கள் கூட இருக்கிறார்கள். அது போல் பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஏஐ மூலம் படங்களை உருவாக்கி வருகின்றன. அது போல் இந்த ஏஐ செயலிகள் நல்லதுக்கு மட்டுமில்லாமல் கெட்டதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஐடி செயலி நமது வாட்ஸ் ஆப்பிலும் வந்துவிட்டது. அதில் நாம் எதை பற்றி வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்டால் நமக்கு ரிப்ளை கிடைக்கும்.

அந்தவகையில், தற்போது உடல்நிலை சரியில்லை என்றால் வாட்ஸ் அப்பில் ஏஐ மருத்துவரிடம் கேட்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.இதில் உள்ள அம்சங்கள் மிகவும் அருமையாகவும், பயனர் நட்புடனும் உள்ளன. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ‘8738030604’ என்ற எண்ணை சேமி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வாட்ஸ்அப்பில் ‘8738030604’ என்ற எண்ணை சேமி செய்து கொள்ளுங்கள். இதற்கு AI மருத்துவர் என்று பெயரிடுங்கள். வாட்ஸ்அப்பை திறந்து ஏஐ மருத்துவர் தொடர்பை திறக்கவும். அரட்டை பெட்டியில் Hi என்று தட்டச்சு செய்யவும். உடனே AI மருத்துவரிடமிருந்து பதில் வரும். அதில் உள்ள ஆலோசனைகள், நிபந்தனைகளை முழுமையாக படிக்கவும். உங்கள் உடல்நலப் பிரச்சினையை தட்டச்சு செய்து அனுப்பவும். நீங்கள் குரல் அரட்டை மூலமாகவும் AI மருத்துவரிடம் பேசலாம்.

உங்கள் குரலை பதிவு செய்து அனுப்பினால் AI மருத்துவர் பதிலளிப்பார். இதில் உள்ள மற்றொரு சிறந்த அம்சம் என்னவென்றால், உங்கள் உடல்நலப் பிரச்சனையின் அறிகுறிகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் AI மருத்துவருக்கு அனுப்பலாம். அதைப் பார்த்து உங்கள் பிரச்சினையைக் கண்டறிவார்கள். மேலும், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்குவார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் உடல்நலப் பிரச்சினை தொடர்பான ஆய்வக அறிக்கைகளையும் இந்த AI மருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்.

அவற்றைப் பரிசோதித்து, உங்கள் உடல்நலப் பிரச்சினை குறைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இந்த ஏஐ மருத்துவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியிலும் பதிலளிப்பார். உங்களுக்குப் பிடித்த மொழியில் ஏஐ மருத்துவரிடம் சாட் செய்து உங்கள் உடல்நலப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

Readmore: தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்..!! தப்பிச் சென்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்தது ஏன்..? சேலம் சரக டிஐஜி பரபரப்பு தகவல்..!!