சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தலைவர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, கொடிப் பாடலும் வெளியிடப்பட்டது. கொடியில் மேலும் கீழும் ரத்தச் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய இரு போர் யானைகளும், நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், விஜய் கொடி ஏற்றி வைத்ததில் இருந்தே கொடியின் நிறம், யானைகள் புகைப்படம் உள்ளிட்டவற்றை வைத்து பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒருபக்கம் காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகள், கட்சிக் கொடியை ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் அனுமதியின்றி கொடியை ஏற்றி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அனுமதியின்றி எந்த இடத்திலும் கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், உத்தரவை மீறி அனுமதியின்றி கொடியேற்றினால், நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
Read More : இனி இந்த வேலைகளை நீங்கள் செய்யக்கூடாது..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!