ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுபானக்கடைகளில் சராசரி விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்க வேண்டும். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு கடை பணியில் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யும் பொருட்டு மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட இளநிலை உதவியாளருக்கு ஜி.பி.எஸ். புகைப்படத்தை அனுப்பிவைக்க வேண்டும். மேற்படி கடைப்பணியில் இல்லாத கடை மேற்பார்வையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுபானக் கடையின் கடை எண்ணுடன் கூடிய பெயர் பலகை மற்றும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். அனைத்து விதமான பதிவேடுகளும் தினந்தோறும் பராமரிக்கப்பட வேண்டும். கடையின் விற்பனையில் வெளிநபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடைப் பணியாளர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Readmore: பருவமழை முன்னெச்சரிக்கை!. சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு!. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!