தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. பின்னர், மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனாலும் கூட சொற்ப அளவிலான திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறையாக திருமணத்தை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ததில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பது தெரியவந்தது. குறிப்பாக, திருமண பதிவுக்கு சுட்டணமாக ரூ.100, கம்ப்யூட்டர் கட்டணமாக ரூ.100 என மொத்தமே ரூ.200 செலுத்தினால் போதும்.

ஆனால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிப்பது தெரியவந்துள்ளது. இதனால், இனி பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டுவர உள்ளது. அதன்படி, தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலத்திற்கு வராமல், தாங்களே நேரடியாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத்தையும் அதிலேயே செலுத்தலாம். திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக சான்றிதழும் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்கு தனியாக சென்ற பெண்..!! போதை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!