ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது PF பரிமாற்ற செயல்முறையை மிகவும் திறமையானதாக்குவதற்கும், தாமதங்களைக் குறைப்பதற்கும், ஊழியர்களுக்கு, குறிப்பாக வேலை மாறுபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கவும் நோக்கமாக உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் 7.6 கோடி ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இபிஎப்ஓ இணையதளம் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமையன்று புதிய EPFO வசதியை அறிமுகப்படுத்தினார்,
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 7.4 கோடி சந்தாதாரர்கள் இப்போது பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாயின் பெயர், திருமண நிலை, வாழ்க்கைத் துணையின் பெயர் போன்ற தனிப்பட்ட விவரங்களில் உள்ள பொதுவான பிழைகளை சுயமாகத் திருத்திக்கொள்ள முடியும். அக்டோபர் 1, 2017க்குப் பிறகு வழங்கப்பட்ட, பெரும்பாலான விவரங்களைத் தானாகத் திருத்திக்கொள்ள முடியும் .”இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எந்த ஆதார ஆவணமும் தேவையில்லை என்று மாண்டவியா கூறினார்.
இதே போல, வேறு நிறுவனத்திற்கு மாறும் போது இ-கேஒய்சி செய்த ஊழியர்கள் ஆதார் ஓடிபி மூலமாக தங்கள் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும். இதற்கு முன் இதற்கு முந்தைய நிறுவனத்தின் ஒப்புதல் வேண்டும். தற்போது அந்த ஒப்புதல் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் பரிமாற்றத்தை இபிஎப்ஓவிடம் தாக்கல் செய்யலாம்.
இபிஎஃப்ஓவுக்கான யுஏஎன் பதிவு, பணியில் சேரும் போது ஊழியர்களுக்காக முதலாளிகளால் செய்யப்படுகிறது. பல ஊழியர்களுக்கு, பதிவு செய்யும் போது அல்லது அதற்குப் பிறகு தந்தை/மனைவி பெயர், திருமண நிலை, குடியுரிமை மற்றும் சேவை விவரங்களைப் பதிவு செய்வதில் முதலாளிகளால் தவறுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிழைகளை சரிசெய்ய, பணியாளர் துணை ஆவணங்களுடன் ஆன்லைனில் கோரிக்கை வைக்க வேண்டும். அதன்படி கோரிக்கை முதலாளியால் சரிபார்க்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது,
மேலும், FY25 இல், முதலாளிகளால் EPFO க்கு அனுப்பப்பட்ட 8 லட்சம் கோரிக்கைகளில், 40 சதவிகிதம் மட்டுமே 5 நாட்களுக்குள் அனுப்பப்பட்டது, 47 சதவிகிதம் 10 நாட்களுக்குப் பிறகு அனுப்பப்பட்டது மற்றும் முதலாளி எடுத்த சராசரி நேரம் 28 நாட்கள். புதுப்பிப்பு செயல்முறையை எளிதாக்குவது, 45 சதவீத வழக்குகளில் ஆதார் OTP சரிபார்ப்பு மூலம் உடனடி திருத்தம் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றும், மீதமுள்ள 50 சதவீத வழக்குகளில் முதலாளி மூலமாகவும் நிவாரணம் கிடைக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.