தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை மேம்பாட்டுத் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். இதில், தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கல்வராயன் மலையில் 140-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவேம் கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா.? மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இருக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போல அரசுப் பள்ளிகளிலும் நீக்கிவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அரசுக் குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ் மணியும், கல்வராயன் மலைக்கு செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more: காவிரி ஆற்றில் 1,10,000 கன அடி நீர் திறப்பு..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!