நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மகள் உள்பட 3 பேரை படுகொலை செய்த ஊர்க்காவல் படை வீரர், போலீசிக்காரர்களுக்கு போன் போட்டு வரவழைத்து சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஜலகள்ளி கிராஸ் பீன்யா பகுதியை சேர்ந்தவர் கங்கா ராஜூ(42) பெங்களூரு நகர்ப்புற எல்லைக்குட்பட்ட ஹெப்பகோடி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக (ஹோம்கார்டாக) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பாக்யா என்ற மனைவியும், நவ்யா(19) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், மனைவி பாக்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தம்பதிகள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்றும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் கங்கா ராஜூ, மனைவி பாக்யா, மற்றும் மகள் நவ்யா, பாக்யாவின் சகோதரி மகள் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, மூன்று பெண்களும் இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு, அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தான் சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 சடலங்களையும் கைப்பற்றி, கங்கா ராஜுவை கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மனைவி பாக்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. மேலும், “ஆத்திரத்தில், நான் அவரை கத்தியால் தாக்கினேன். இரண்டு சிறுமிகளும் என்னைத் தடுக்க முயன்றனர் மற்றும் நான்தான் தவறு என்று கூறி என்னை சபித்தனர்”. மேலும், “நான் பாக்யாவிடம் அவளது விவகாரம் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம், இரண்டு சிறுமிகளும் அவளுக்கு ஆதரவாக இருப்பார்கள். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அதே கத்தியால் அவர்களைத் தாக்கி கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Readmore: நான் ஜிஎஸ்டி ஆபிஸில் இருந்து வரேன்!. ரசீது இல்லையா?. அப்போ ரூ.2000 கொடு!. போலியாக நடித்து பணம் பறிக்க முயற்சி!. சிசிடிவியை பார்த்து தலைத்தெறிக்க ஓடிய நபர்!