உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களும், உறவுகளும் பிறருக்கு வாழ்த்துகளை மொபைலில் அனுப்பி வருகின்றனர். ஆனால், இதிலும் தற்போது மோசடி நடைபெற்று வருவதாக சைபர் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள்‌ என ஒரு apk file அல்லது link வரும்‌. அதில் உங்கள்‌ உறவினர்கள்‌ மற்றும்‌ நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம்‌ என குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள்‌ அந்த apk file-ஐ ஓப்பன் செய்துவிட்டால்‌, உங்களது போனில்‌ உள்ள அனைத்து தரவுகளும் திருடப்பட்டுவிடும்.

மேலும், உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொண்டு பண மோசடியில் ஈடுபடுவார்கள். எனவே, வாட்ஸ் அப்பில் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரும் புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும்‌. அந்த எண்ணிற்க்கு மொபைல்‌ போன்‌ மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்‌. இது போன்ற பண மோசடி நடைபெற்றால்‌, உடனே சைபர்‌ கிரைம்‌ இணையதளத்தில்‌ https://cybercrime.gov.in/ அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Read More : தந்தைக்காக காத்திருந்த +2 மாணவி!. இருட்டில் வந்த அரக்கன்!. கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கூட்டு வன்கொடுமை!