இன்றைய உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக வாட்ஸ்அப் உள்ளது. இன்றைய இணைய உலகில் தனி புரட்சியை இந்த வாட்ஸ்அப் செய்து வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாகவே இருந்து வந்தது. காலபோக்கில் பல புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் உலகின் முன்னணி சமூக வலைத்தள செயலியாக நிலைநாட்டியுள்ளது.

தற்பொழுது வாட்ஸ்அப்பில் பணப் பரிவர்த்தனை, மெட்டா AI தொழிநுட்பம் என்று புது புது அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இன்றுவரை இன்டர்நெட் மூலம் மட்டும் வாட்ஸ்அப் இயங்கி வரும் நிலையில் விரைவில் இன்டர்நெட் இல்லாமல் அச்செயலியை பயன்படுத்தும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த போவதாக WABeta Info தெரிவித்துள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் வாட்ஸ்அப் பயனர்கள் PDF மற்றும் வீடியோக்கள்,போட்டோக்கள் போன்ற கோப்புகளை இணைய வசதி இல்லாமல் QR கோர்டை ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு எளிதில் அனுப்ப முடியும்.முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இவ்வசதி கொண்டுவரப்பட உள்ளது. பிறகு IOS பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.