உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிகளில் (Domestic Money Transfer Rules) ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த விதிகள் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகின்றன.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த விதிகளை பின்பற்றாமல், பணம் அனுப்புவது எளிதானது கிடையாது. அதேபோல ஓடிபி மட்டுமே கொடுத்து பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்த விதிகளால் பேங்க் கஸ்டமர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டி இருக்கும்? பேங்கில் கொடுத்த ஆவணங்களில் எதை கட்டயமாக புதுப்பிக்க வேண்டி இருக்கும்?

இந்த விதிகளில் கேஒய்சி (KYC) மற்றும் கூடுதல் காரணி அங்கீகாரம் – ஏஎப்ஏ (Additional Factor of Authentication – AFA) ஆகியவை கஸ்டமர்களுக்கு நேரடியாக மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன. அதாவது, பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் அனுப்பும்போது, அக்கவுண்ட் நம்பர், பெயர் மற்றும் ஐஎப்எஸ்சி விவரங்கள் மட்டுமே கேட்கப்படும். ஆனால், இப்போது முகவரியும் சேர்ந்துவிட்டது.

அதாவது, எந்த பேங்கில் இருந்து பணம் அனுப்பப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், எந்த முகவரியில் இருக்கும் கஸ்டமரின் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதும் கண்காணிக்கப்பட இருக்கிறது. இந்த முகவரியை பேங்குகள் சேகரிக்க தொடங்கும். ஆகவே, உங்களுக்கு யார் பணம் அனுப்பினாலும்,பேங்க் விவரங்கள் மட்டுமல்லாமல், வீட்டு முகவரியும் பதிவு செய்யப்படும்.

இதுபோக பணம் அனுப்புவோரின் விவரங்களானது மொபைல் நம்பர் மற்றும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் – ஓவிடி (Officially Valid Document – OVD) ஆகியற்றின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். இதை பேங்க்குகள் பார்த்து கொள்ளும். ஆனால், உங்களது விவரங்கள் ஒத்துபோகாமல் இருந்தால், பணம் அனுப்பவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது கொடுக்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஓவிடி ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால், கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஆதார் விவரங்கள் பேங்க் அக்கவுண்ட் உடன் பொருந்தும்படி பார்த்து கொள்ளுங்கள்.

ஏனென்றால், இந்த புதிய விதிகளில் கேஒய்சிக்கு அடுத்தபடியாக கூடுதல் காரணி அங்கீகாரம் – ஏஎப்ஏ (Additional Factor of Authentication – AFA) விதிகளும் அமலுக்கு வருகின்றன. அதாவது, இதுவரை பேங்க் மூலம் பணம் அனுப்பும்போது, நீங்கள் ஓடிபி கொடுத்து பரிமாற்றத்தை முடித்திருப்பீர்கள். ஆனால், இப்போது ஓடிபியுடன் கூடுதலாக வெரிபிகேஷன் காரணிகள் வர இருக்கிறது.

இந்த வெரிபிகேஷனில் ஆதார் அங்கீகாரம் அல்லது ஃபிங்கர்பிரிண்ட் போன்று கூடுதல் காரணிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, ஓடிபி மட்டுமல்லாமல், உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் கொடுக்கப்பட்ட ஆதார் கார்டு மூலம் வெரிபிகேஷன் அல்லது பயோமெட்ரிங் விவரங்களான ஃபிங்கர்பிரிண்ட் போன்றவையும் கூடுதலாக சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே, முதலில் பார்த்த கேஒய்சி விதிகள் மூலம் பேங்க் பணத்தை பரிமாற்றம் செய்யும் கஸ்டமர்களின் மொபைல், முகவரி, பேங்க் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் பதிவு செய்யப்படுவதால், எளிதாக கஸ்டமர்களை அடையாளம் காண முடியும். அதேபோல கூடுதல் காரணி அங்கீகாரம் மூலம் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைகளின்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த விதிகள் உள்நாட்டில் பணப் பரிமாற்றம் செய்யும் அனைத்து பேங்க் கஸ்டமர்களுக்கு வர இருக்கிறது. ஆகவே, ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் என்இஎப்டி (NEFT) பரிவர்த்தனைகளில் இந்த விதிகளை பின்பற்ற வேண்டி இருக்கும். கூடுதல் காரணி அங்கீகாரமானது, பேங்குகள் மூலம் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து அப்டேட் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Readmore: களைகட்டியது கொண்டாட்டம்..!! இன்பங்கள் மலரும் தீப ஒளியாக அமையட்டும்..!! Idp7Newsஇன் தீபாவளி வாழ்த்துகள்..!!