பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளின் முதுநிலை பாடத்தில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, சமூகவியல், இதழியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர் வேதியியல், உயிர் புள்ளியியல், ஆற்றல் அறிவியல், கல்வியியல், உயிர் மருத்துவ அறிவியல், ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்தநிலையில், பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு முரணான இந்த உத்தரவினால், முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆய்வு மாணவர்கள் முன்வருவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டு ஆய்வு கட்டுரைகள் வாயிலாகப் பெறப்படும் தரவுகளை சேகரிக்க பல லட்சம் செலவிட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கம், ஏழை எளிய மாணவர்கள் பயிலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் இது போன்ற அதிகபட்ச தொகையை செலவிட முடியாமல் பல மாணவர்கள் தங்கள் ஆய்வினை பாதியிலேயே நிறுத்திவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Readmore: நெருங்கும் பண்டிகைகள்!. எகிறிய தேங்காய் விலை!. விவசாயிகள் மகிழ்ச்சி!.