தேசிய அளவில் நடைபெறும் ஹாக்கி போட்டிக்கு தமிழ்நாடு அணி சாா்பில் விளையாட சங்ககிரி அரசுப் பள்ளி மாணவர் தோ்வு பெற்றுள்ளாா்.

வரும் டிசம்பர் மாத முதல் வாரத்தில் மத்திய பிரதேசம், போபால் ஆகிய இடங்களில் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத்தின் சாா்பில் மாநில அளவில் 14 வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டி கடந்த திங்கள்கிழமை ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள எட்டு மண்டலத்திலிருந்து 88 மாணவா்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், 11 போ் கொண்ட குழுவினை விளையாட்டுக் குழும உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனர். இதில், குறிப்பாக, சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.சபரிஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, மாணவர் சபரிஷுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

Readmore: உஷார்!. இந்த அறிகுறிகள் வாட்ஸ்அப்பில் தோன்றுகிறதா?. உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்!.