எடப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் கொடுத்துள்ளார்.

பள்ளிகளில் பொதுவாக பிரார்த்தனை கூட்டத்தின்போது, துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படும். அதன்படி, தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் காலை, 9:10 மணிக்கு நடத்தப்படும் இறைவணக்க வழிபாட்டு கூட்டம் நடத்தப்படும். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, பின்னர் உறுதிமொழி, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, பொது அறிவு, ஆசிரியர் உரை, தலைமை ஆசிரியர் உரை வரிசையாக நடத்தப்பட்டு, இறுதியாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில், 1,700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவரும் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,நேற்று காலை நடத்தப்பட்ட வழிபாட்டு கூட்டத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, பொதுஅறிவு, ஆசிரியர் உரை, தலைமை ஆசிரியர் உரை வரிசையாக நடத்தப்பட்டது. ஆனால், இறுதியில் தேசிய கீதம் பாடாமலேயே கூட்டம் நிறைவு பெற்றதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தலைமை ஆசிரியை விஜயா விளக்கமளித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வு நடப்பதால், அந்த மாணவர்கள், 400க்கும் மேற்பட்டோர் இறைவணக்க கூட்டத்தில் பங்கேற்காமல், வகுப்பறைகளில் படித்து கொண்டு இருந்தனர். தேசிய கீதம் பாடினால், எழுந்து நிற்கும்போது அவர்களின் படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பாடவில்லை,” என்றார். இதையடுத்து தேசிய கீதம் கண்டிப்பாக பாட வேண்டும். வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்காகவோ, சாலையில் நடந்து செல்பவர்களுக்காகவோ, பள்ளிக்கு வராமல் வீட்டில் உள்ள மாணவர்களுக்காகவோ சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Readmore: கள்ளக்காதலிக்காக சண்டைப்போட்ட இளைஞர்கள்!. கொலையில் முடிந்த பயங்கரம்!. சேலத்தில் பகீர்!