தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Readmore: லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்!. பெண்களுக்கான சூப்பர் திட்டம்! எப்படி இணைவது..?