சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்த புனிதா (19) என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் புனிதாவுக்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அதிலும், புனிதாவுக்கு அரசு ஒதுக்கீட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில், மனமுடைந்து போன புனிதா நேற்று யாரும் இல்லாதபோது, தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்ற திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் எம்பியுமான டி.எம்.செல்வகணபதி, மாணவியின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதோடு, ரூ.3 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
Read More : எத்தனை உயிர்கள் போனாலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு..!! எடப்பாடி மாணவிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!