வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில், பருவமழையை எதிர்கொள்ள சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திரன் பச்சப்பட்டி, ஆறுமுக நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Readmore: சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்..!! கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!! தண்ணீர்தாசனூர் பகுதியில் அவலம்..!!