கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் விவசாயத்திற்கு முக்கிய நீராதரமாக விளங்குவது மேட்டூர் அணை. இந்த அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால் படிப்படியாக திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,537 கன அடியாக உள்ளது.

போதிய அளவு தண்ணீர் வராததால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அதாவது, அணையின் நீர் மட்டம் 99.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 64.56 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: அரசிராமணி அதிகாரிகளின் கவனத்திற்கு..!! நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து விவசாயம்..!! மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்..!! பொதுமக்கள் குற்றச்சாட்டு..!!