கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Mettur Dam | கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீரானது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு 19,250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணை 71-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணையின் முழு கொள்ளளமான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். எனவே, காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

Read More : Mettur Dam | வரலாற்றில் 71-வது முறை..!! 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!