Mettur Dam | மேட்டூா் அணைக்கு இன்று காலை நீா்வரத்து வினாடிக்கு 1,70,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 16 கண் பாலம் வழியாக 1,48,500 கனஅடி நீரும், நீா் மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

இந்நிலையில், மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Read More : FASTag | ஃபாஸ்டேக் முறையில் அதிரடி மாற்றம்..!! இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறை..!!