சேலத்தில் திருமணமான 20 நாட்களில் மாயமாகி, காதலனை திருமணம் செய்து காவல்நிலையத்திற்கு வந்து பெண், இருவர் கட்டிய தாலியையும் கழட்டி வைத்துவிட்டு பெற்றோருடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த 23 வயது பெண்ணிற்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், திருமணமான 20 நாளில் புத்தாண்டையொட்டி புதுமண தம்பதிகள், பெண்ணின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது, புத்தாடை எடுப்பதற்காக சேலம் டவுனுக்கு சென்றுள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்ட, புதுமணப்பெண் பழைய பேருந்து நிலைய கழிவறைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மனைவி வராததால், சந்தேகமடைந்த அவரது கணவர், பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். பின்னர் இதுபற்றி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று டவுன் காவல்நிலையத்திற்கு மாயமான அப்பெண் காதலனுடன் வந்தார். இதையடுத்து, கணவர் மற்றும் பெற்றோர்களும் காவல்நிலையத்திற்கு வந்தனர்.
அதாவது, இளம்பெண், திருமணத்திற்கு முன்பே சேலம் கோரிமேட்டை சேர்ந்த செந்தில் என்பவரை காதலித்து வந்ததும், தற்போது அவருடன் திருமணம் செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை கேட்டு புதுமாப்பிள்ளை மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், காதலனுடன் தான் செல்வேன் என்று அப்பெண் பிடிவாதமாக இருந்துள்ளார். இதையடுத்து சமாதானம் செய்ததையடுத்து கோபத்தில் இருந்த அப்பெண், இறுதியில் 2 தாலியையும் கழட்டி காவலநிலையத்தில் வீசிவிட்டு பெற்றோருடன் சென்றார். மேலும், முறையாக கணவரை விவாகரத்து செய்யும் வரை பெற்றோருடன் செல்வதாக எழுதிவைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: PF பயனர்களுக்கு குட் நியூஸ்..!! இனி பணம் எடுக்க தனி ஏடிஎம் கார்டு..!! லிமிட் எவ்வளவு தெரியுமா..?