நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அனுஷ்கா, தனது உயரம், எடை மற்றும் அழகால் பல ரசிகர்களை குவித்தார். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். தென் இந்திய நடிகைகளில் அதிகமான சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை இவர்.
தெலுங்கு திரையுலகில் எல்லாம், இவருக்கு கோடிகளில் தான் சம்பளம் என்று பலரும் பேசி வருவது வழக்கம். அவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்தது. அந்த படத்தின் பிறகு வெளிநாடு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் அனுஷ்கா பாகுபலியில் அணிந்த ஆடை, நகைகள் என அனைத்தையும் வாங்கும் வேட்டையில் இறங்கினார்கள்.
இத்தகைய புகழுக்கு சொந்தக்காரியான அனுஷ்கா, 2015ம் ஆண்டில் வெளியான ‘இஞ்ஜி இடுப்பழகி’ படத்தில் உடல் எடை கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து பழைய ஒல்லி உடல் வாகிற்கு திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்துமே முழு பலன் அளிக்கவில்லை.
இவரின் உடல் எடை கூடுதல் ஊர் வாய்க்கு அசைப்போட்டது போல் ஆனது. படங்கள் வாய்ப்பளிக்க இயக்குநர்கள் சிலரும் யோசித்து வந்தனர். ஆனால் தற்போது 42 வயது ஆகும் அனுஷ்கா ஷெட்டி, மிஸ் ஷெட்டி மிஸஸ் பொலிஷெட்டி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; இப்போது கிரிஷ் இயக்கத்தில் காட்டி படத்தில் நடித்துவருகிறார். இது ஹீரோயினை மையப்படுத்திய படமாக உருவாகிவருகிறது. இது தவிர்த்து மலையாளத்தில் காத்தனார் என்ற படத்திலும் நடித்து மல்லுவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.
இந்தநிலையில், அவரது திருமணம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும்; அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும்; கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள அனுஷ்காவும் ஒத்துக்கொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Readmore: சேலம் சிறுத்தை மரணத்தில் திருப்பம்!. கல்லால் தாக்கி, துப்பாக்கியால் சுட்டதாக தகவல்!