40வயது நபருடன் திருமணம் செய்துவைக்க பார்த்ததால், இரவோடு இரவாக மண்டபத்தில் இருந்து காவல்நிலையத்தில் இளம்பெண் காதலருடன் தஞ்சம் மடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு விருந்து தடபுடலாக நடைபெற்று வந்தது. இரவு நிச்சயதார்த்தம் செய்த நிலையில் விடிந்தால் திருமணம் நடைபெற இருந்தது. இதனால் திருமண மண்டபத்தில் உறவினர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்தநிலையில் இரவு விருந்து நடைபெற்றிருந்த நிலையில், திடீரென மணமகள் மாயமானார். இதையடுத்து, திருமண மண்டபம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில், மாப்பிளை வீட்டார் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மணப்பெண் திடீரென மாயமானநிலையில் திருமணத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளோம் என்றும் அந்த பணத்தை பெண் வீட்டார் கொடுக்கவேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு பெண் வீட்டார் தரப்பில், தாங்களும் செலவு செய்துள்ளோம் எனவே அந்த பணத்தை எங்களால் தர முடியாது என்று கூறியுள்ளனர். இந்தநிலையில், மணப்பெண் ஓமலூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, 20 வயதான நான் இளைஞர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் தனக்கு மாப்பிளை பார்த்து திருமண ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். மேலும், அந்த மாப்பிளைக்கு 33 வயது என்று கூறினர். ஆனால் அவருக்கு 40 வயது இருக்கும். இதனால் திருமணம் வேண்டாம் என்று கூறியும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்தனர் என்று கூறிய மணப்பெண், தன் காதலருடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Readmore: பெண்களே!. முகத்தில் முடி வளர்வதால் அவதிப்படுகிறீர்களா?. வீட்டிலேயே அகற்ற எளிய முறை!.