அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். அதில் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவற்றில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை முக்கிய இடம் வகிக்கிறது. அந்த வகையில், மகாளய அமாவாசையான இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஆற்றில் ஏராளமானவர்கள் திரண்டனர்.

அதிகாலையிலேயே, புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர். ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடி சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், ஆண்கள், பெண்கள் என குளிப்பதற்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

Readmore: உடல்நிலை சரியில்லையா?. வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது புதிய வசதி!. இந்த எண்களை சேமித்துக்கொள்ளுங்கள்!