சங்ககிரி தேவூர் அருகே தலைக்கேறிய மதுபோதையால், பள்ளத்தில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் கல்லாங்காடு வலசு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்(55). கூலித்தொழிலாளியான இவர், தேவூர் அருகே புளியம்பட்டி ஆலமரம் பகுதியில் மது அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதை தலைக்கேறியது. இதனால், நிலைத்தடுமாறிய மாதேஸ் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த மாதேஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேவூர் போலீசார், மாதேஸின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: விவசாயிகளே குட்நியூஸ்!. ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத்தொகை ஒதுக்கீடு!. தமிழக அரசு அறிவிப்பு!