தான் வரைந்த படத்தை காண்பித்த 5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி தாளாளரின் கணவரை பெற்றோர்கள் கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், 4 மற்றும் 5ம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு, பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பெற்றோர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமி தான் வரைந்த வரைபடத்தை காண்பித்தபோது, அதனை பார்ப்பதாக நடித்து சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். சிறுமிகள் மீது தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கையும் களவுமாக வசந்தகுமாரை பிடித்த பெற்றோர்கள் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மாணவியின் உறவினர், உண்மையை சொல்லு, என்ன பண்ண, உண்மையை சொன்னால் விட்டுவிடுகிறேன் என்று சொல்ல, அதற்கு வசந்த குமார், வெளியே தெரிந்தால் மானம் போய்விடும். என்னை விட்டுவிடுங்கள். மாணவர்கள் எனது பிள்ளைகள் போன்றவர்கள் என பேசி தப்ப முயன்றார். இதையடுத்து, வசந்தகுமாரை போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வசந்தகுமார், சுதா, ஜெயலட்சுமி, பள்ளியின் நிர்வாகிகள் 2 பேர் என மொத்தமாக ஐந்து நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Readmore: ஓடும் ரயில் பாலியல் துன்புறுத்தல்!. கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம் செய்த கொடூரன்!. கருவில் இருந்த குழந்தை பலியான சோகம்!.